Thursday, July 30, 2009

ஒரு வரம் அல்லது சாபம் வேண்டும் .




ஒரு வரம் அல்லது சாபம் வேண்டும் .

நான்! ஒன்றும் இல்லாமல் போக வேண்டும்
ஆம், கனவுகள் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் மாற வேண்டும்,
அந்த சலனம் இல்லாத சபலம் இல்லாத நிலை வேண்டும்.
நான் என்ற ஒன்றும் இல்லாமல் போக வேண்டும்.
இது காணாமால் போவதல்ல ! நான் கரைந்து போக வேண்டும் ,
இந்நிலை வரமாய் மட்டுமல்ல சாபமாய் ஆனாலும்,
நான் தயார்,

வழி சொல்ல யாராவது வருவிர்களா ?